அல் அக்சா

அல் அக்சா பள்ளிவாசலே யெருசலேமிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசலாகும். 5000 பேர்வரை உள்ளேயும், வெளியிலுமிருந்து தொழக்கூடிய வசதிகள் உண்டு. இக்கட்டிடத்தில், சிலுவைபடையினர்களின் (Crusader) பாணியுட்பட பல பாணிகளின் கலவை காணப்படுகிறது. சிலுவைபடையினர் யெருசலேமைக் கைப்பற்றி வைத்திருந்தபோது, இந்த பள்ளிவாசல் ஓர் அரண்மனையாகப் பயன்படுத்தினார்கள். முற்காலத்தில் யூத ஆலயம் இருந்த இடத்தில் இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையில், அப்பொழுது இது சொலமனின் ஆலயம் என அழைக்கப்பட்டது. அவ்வப்போது, அல்-அகசா, தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காக இருந்தது எனினும், பெரும்பாலான தாக்குதல்கள், இசுரேல் பாதுகாப்புப் படைகளால் முறியடிக்கப் பட்டன.

இம் பள்ளிவாசலின் சுற்றுமதிலின் ஒருபகுதியான மேற்குச் சுவர் யூதர்களின் வணக்கத்துக்குரியதாக இருப்பதால், யெரூசலத்தின் ஒரு சிறிய பகுதியான இது முசுலிம்கள், யூதர்களுக்கிடையேயான முறுகல் நிலைக்குக் காரணமாகக் கூடியது.